இயக்கத்தின் பிரம்மாண்டம் என்று சொன்னாலே அது சங்கர் தான். அந்த அளவுக்கு தனது பிரம்மாண்ட இயக்கத்தால் ரசிகர்களை கட்டி போட்டு உள்ளார். தனது ஒவ்வொரு படத்திலும் எதையாவது பிரம்மாண்டமாக செய்து ரசிகர்களை கவருவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார் சங்கர். இந்நிலையில் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி உள்ளார் சங்கர்.

இப்படத்தில் இவருடன் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ஜெகன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. இதனால் பாகம் இரண்டு மற்றும் பாகம் மூன்று என படங்களை வெளியிட திட்டமிட்டு இருந்தார் சங்கர். அதன்படி இரண்டாவது பாகம் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகத்தை நேரிடையாக ஓடிடியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும், இந்தியன் 3ஆம் பாகத்தை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் படக்குழு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.