விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு ஏராளமான குடும்ப தலைவிகள் ரசிகைகளாக உள்ளனர். இதனால் இந்த நாடகம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரசியம் அதிகரித்து வரும் வண்ணம் இருப்பதே இந்த தொடரின் சிறப்பு அம்சமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது பாக்கியாவை குடும்பத்தை விட்டு விரட்ட கோபி திட்டமிடுகிறார். அதற்கான வேலைகளையும் தொடங்கி உள்ளார் கோபி. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , செழியனை குடிக்க வைத்து கோபி வீட்டிற்கு அழைத்து வருகிறார். மேலும் வீட்டில் நிம்மதி இல்லை என்பதால் செழியன் குடித்துவிட்டு தன்னை பார்க்க வருவதாக பொய் சொல்லுகிறார்.

இதனை கேட்ட பாக்கியா, கோபியை அழைத்து வெளுத்து வாங்குகிறார். பாக்கியா பேச்சை கேட்டு கோபி பேச முடியாமல் அதிர்ச்சியாகி உறைந்து நின்றுகொண்டு உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மகனை குடிக்க வைத்து அழைத்து வரும் கோபியை ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION