படத்திற்காக உண்மையாகவே பிச்சை எடுத்த நடிகர் கவின்..! பிளடி பெக்கர் படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..!

பிக் பாஸ் மூலம் பிரபலமாகியவர் நடிகர் கவின். தொடக்கத்தில் சின்னத்திரையில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக ஜொலித்து வருகிறார். இவர் சினிமா வாழ்க்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் இவர் நடித்த லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

படத்திற்காக உண்மையாகவே பிச்சை எடுத்த நடிகர் கவின்..! பிளடி பெக்கர் படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த டாடா படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது . தொடர்ந்து படங்களை கொடுத்து சினிமாவில் நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் கவின். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் பிளாடி பெக்கர் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து உள்ளார்.

படத்திற்காக உண்மையாகவே பிச்சை எடுத்த நடிகர் கவின்..! பிளடி பெக்கர் படம் குறித்து மனம் திறந்த நடிகர் கவின்..! 3

விளம்பரம்

இப்படத்தில் நடிகர் கவின் பிச்சைக்காரர் போல வேடமணிந்து நடிக்க உள்ளார். இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியதில் இருந்து படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அண்மையில் படத்தின் முதல் பார்வை போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்திற்காக பிச்சைக்காரர் போல வேடமணிந்து தெருவில் பிச்சை எடுத்து உள்ளார். அப்போது ஒரு பெண் இருபது ருபாய் கொடுக்கவே, உடனே ஷூட்டிங்கிற்கு தயாராகி விட்டதாக சென்று உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment