போடா போடி படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று முன்னணி இயக்குனர் ஆக உயர்ந்து நிற்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கிய முதல்படமான இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை. பின்னர் விஜய் சேதுபதியை வைத்து இவர் இயக்கிய நானும் ரவுடி தான் படம் மாபெரும் ஹிட் அடித்து விக்னேஷ் சிவனை முன்னணி இயக்குனர் ஆக உருமாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் நடிகர் அஜித்தை வைத்து லைக்கா தயாரிப்பில் மிகப்பெரிய படத்தினை இயக்க இருந்தார். ஆனால் அந்தப்படத்தை லைக்கா நிறுவனம் கைவிட்டு விட்டது. நீண்ட நாட்களாக தயாரிப்பாளர் இல்லாமல் இருந்த விக்னேஷ் சிவன் தற்போது புது கதையுடன் செவென் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தை அணுகியுள்ளார். இந்த கதை தயாரிப்பாளருக்கு பிடித்து போகவே தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து லைப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தினை இயக்கி உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காதுவாக்குல இரண்டு காதல் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியில் வெளியாக இருக்கும் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கின்றனர். தற்போது இப்படத்தில் இருந்து வெளியாக உள்ள முதல் பாடலான தீமா பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Embed Video Credits : SONY MUSIC SOUTH