தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற இடத்தை பிடித்து இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். நடிகர் சிம்புவை வைத்து போடா போடி என்ற படத்தினை இயக்கி சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார். இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்காவில்லை. பின்னர் இவர் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடி தான் என்ற படத்தினை இயக்கி இருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று விக்னேஷ் சிவனை முன்னணி இயக்குனராக உருமாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த படத்தில் நயன்தாரா உடன் காதல் ஏற்படவே அவரை தற்போது திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இவர் இயக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்த, காத்து வாக்குல ரெண்டு காதல் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. மேலும் விக்னேஷ் சிவன் தற்போது இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை வைத்து லைப் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தினை இயக்கி உள்ளார்.

இப்படத்தினை நயன்தாரா தயாரித்து உள்ளார். அனிருத் இசையில், விக்னேஷ் சிவன் பாடல் வரிகளில் தீமா என்ற பாடலை படக்குழு தற்போது அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டு உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்களை பாடல் அதிகம் கவர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Embed Video Credits : SONY MUSIC SOUTH