மோடியின் விடாபிடித்தனம்: நியூயார்க் டைம்ஸ் விமர்சனம்

திருத்தப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டம், மோடி மற்றும் அவரது உள்துறை அமைச்சரான அமித்ஷா ஆகியோரின்; முஸ்லிம்களை ஓரங்கட்டவும், இந்தியாவை இந்து நாடாக மாற்றவும் மேற்கொண்டுள்ள பிரச்சாரம் என அமெரிக்க செய்தி நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் விமர்சித்துள்ளது.

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாடு முழுக்க போராட்டங்களும் நடைபெற்றுவருகின்றன. சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள், கட்சிகள் என அனைவரும் களத்தில் நிற்கின்றனர். இந்தியா முழுக்க 12க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருவதால், மொபைல் சேவை மற்றும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டு இருப்பதையும் நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் பேசுகிறது.

விளம்பரம்
மோடியின் விடாபிடித்தனம்: நியூயார்க் டைம்ஸ் விமர்சனம் 1
மோடியை விமர்சித்த நியூயார்க் டைம்ஸ்.

களத்தில் உள்ள போராட்டக்காரர்களை காவல்துறை மற்றும் இராணுவத்தைக் கொண்டு கடுமையாக அடக்குமுறையை ஏவி வருகிறது. மேலும் போராட்டம் நடக்கும் பல இடங்களில் 144 தடை உத்தரவு திணிக்கப்பட்டு போராட்டக்காரர்களை தடுக்கின்றனர். ராமச்சந்திர குஹா போன்ற அறிவு ஜீவிகளையும், சீதாராம் எச்சூரி போன்ற தலைவர்களையும் அரசு தடுக்க முயல்கிறது.

தொடர்புடையவை  ராஜீவ் கொலையில் பெல்ட் குண்டு குறித்து புதிய அறிக்கை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

உலகில் எந்த ஒரு சர்வாதிகார அரசாங்கமும் செய்யாத ஒன்றினை இந்திய அரசாங்கம் செய்து வருகிறது. பொய்யான வதந்திகளையும், வன்முறைகளையும் தடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு மொபைல் மட்டும் இணைய சேவைகளை நிறுத்திவிட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காஷ்மீர் இணைய சேவை இன்றி தவிக்கிறது. இணையதளத்தை தடுத்து நிறுத்துவதில் உலகிற்கே தந்தையாக இந்தியா உயர்ந்துள்ளது என கூறியுள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment