திமுகவின் அழைப்பை ஏற்று சென்னையில் நடைபெறும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பேரணியில் கலந்து கொள்வதாக கமலஹாசன் அறிவித்துள்ளார்.
திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வரும் 23ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தை பற்றி கமலஹாசன் தன்னோட ஆலோசித்ததாகவும், தேவைப்பட்டால் பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவும் தயார் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சென்னை பல்கலைக்கழக போராட்டத்தில் ஈடுபட்டு மாணவர்களை சந்தித்த கமலஹாசன் திமுக தலைமையிலான பேரணியில் கலந்து கொள்வதாக கூறினார்.
கமலின் பதிலையடுத்து திமுகவின் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி கமலஹாசன் இன்ற அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பை கமலஹாசனுக்கு மக்கள் நீதி மய்யத்திற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பினை கமலஹாசனும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.