தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இமான் அண்ணாச்சி. இவரின் நகைச்சுவைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் தொகுத்து வழங்கிய குட்டி சுட்டிஸ் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக இவருக்கு அமைந்தது. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த இவருக்கு சினிமா வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிய தொடங்கியது. தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்று உள்ளார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தி இருந்தார் இமான் அண்ணாச்சி. எந்த போராட்டங்கள் நடந்தாலும் முதல் ஆளாக குரல் கொடுப்பார் இமான் அண்ணாச்சி. இவர் தற்போது கோலிசோடா ரைசிங் வெப் தொடரில் நடித்து வருகிறார். இதில் இவர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் கலை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறார்.

இவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் ஓய்வில்லாமல் உழைத்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு இமான் அண்ணாச்சி உணவு வழங்கி உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இமான் அண்ணாச்சியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
