தமிழில் 7 சீசன்களை கடந்து பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் அடியெடுத்து வைத்து இருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் நாளே விஜய் சேதுபதி திறமையாக கையாண்டு அசத்தியுள்ளார். தற்போது நாளுக்கு நாள் போட்டி சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். முதல் ஆளாக ரவீந்தர் எலிமினேட் ஆகியுள்ளார்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், அன்ஷிதா மற்றும் தர்ஷா இடையேயான முட்டை விவகாரம் குறித்து பேசியுள்ளார் விஜய் சேதுபதி. இதில் சுற்றி வளைத்து பேசிய தர்ஷா பேச்சை கேட்காத விஜய் சேதுபதி, கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் என கூறி எச்சரித்து உள்ளார்.
Embed Video Credits : VIJAY TELEVISION