கணவரை பிரிந்தாரா ரம்யாகிருஷ்ணன்..? அவரது கணவரே சொன்ன தகவல்..!

தென் இந்திய சினிமாவின் ராஜமாதா என்றே நடிகை ரம்யா கிருஷ்ணனை அழைக்கலாம். அந்த அளவுக்கு தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் இவர். பாகுபலி படத்தில் இவர் நடித்த நடிப்பு சினிமா இருக்கும் வரை பேசப்படும். அந்தளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வந்த இவர் தற்போது மலையாளம் , தெலுங்கு என எல்லா சினிமாக்களையும் கலக்கி வருகிறார் ரம்யாகிருஷ்ணன்.

கணவரை பிரிந்தாரா ரம்யாகிருஷ்ணன்..? அவரது கணவரே சொன்ன தகவல்..! 1

விளம்பரம்

ரம்யா கிருஷ்ணன் பிரபலமாக காரணமாக இருந்தது அவரின் நீலாம்பரி கதாபாத்திரம் தான். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் ரம்யாகிருஷ்ணன்.தற்போது முக்கிய கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு அடுத்தடுத்து நிறைய படங்கள் வெளியாக உள்ளது. இவர் இயக்குனர் வம்சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மகன் ஒருவர் உள்ளார்.

கணவரை பிரிந்தாரா ரம்யாகிருஷ்ணன்..? அவரது கணவரே சொன்ன தகவல்..! 3

விளம்பரம்

இந்நிலையில் ரம்யாகிருஷ்ணன் கணவரை பிரிந்துவிட்டதாக இணையத்தில் செய்திகள் உலா வர தொடங்கியது. இதுகுறித்து அவர் கணவரிடம் கேட்ட பொழுது, தான் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதாகவும், மனைவி ரம்யா சென்னையில் இருப்பதால் இதுபோன்ற வதந்திகள் வருவதாக கூறி அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் அவர்.

விளம்பரம்

Leave a Comment