தெய்வமகள் சீரியலில் நாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியல் மூலம் பல ரசிகர்களையும் பெற்று இருந்தார். அதிலும் இவருக்கு குடும்ப தலைவிகள் ரசிகர்கள் அதிகம். இந்த சீரியலுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து அசத்தி வருகிறார். தமிழில் ஓ மை கடவுளே படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தார் வாணி போஜன்.

இப்படத்தை தொடர்ந்து மலேசியா டு அம்னீசியா படத்தில் கதாநாயகியாக நடித்து உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் செங்கமளம் தொடரில் இவர் நெகட்டிவ் ரோலில் நடித்தும் அசத்தியிருப்பார். தற்போது தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார். மகான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், படத்தில் இவர் காட்சிகள் முற்றிலும் நீக்கப்பட்டது.

தற்போது இவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது. தற்போது இவர் சேலையில் எடுத்த கியூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வாணிபோஜன் செம்ம கியூட்டாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
