தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே சினிமாவில் உச்சத்தை அடைந்த ஒரே நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு இவரின் கடின உழைப்பே காரணம். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று முன்னணி நட்சத்திரமாக சினிமாவில் உருவெடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். முன்னணி நாயகர்களுக்கு இணையாக நூறு கோடிகளில் சிவகார்த்திகேயன் படங்கள் வசூலை பெற்று வருகிறது.

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்து உள்ளார். அக்டொபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தற்போது இன்று இவரது மகள் ஆராதனாவுக்கு பிறந்தநாள் என்பதால், சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி சிவகார்த்திகேயன் மகளின் பிறந்தநாளுக்கு புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.