கஜினி 2 அப்டேட்..! சூர்யா சொன்ன நல்ல செய்தி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. ஆரம்பத்தில் வெற்றிக்கு போராடிய சூர்யா இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பதற்கு காரணம் அவரின் கடின உழைப்பு மட்டுமே ஆகும். தற்போது சூர்யா அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து உள்ளார். இவரின் படங்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்து உள்ளனர்.

கஜினி 2 அப்டேட்..! சூர்யா சொன்ன நல்ல செய்தி..! 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. இப்படத்தின் ஹிந்தி ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சூர்யா அடிக்கடி மும்பை சென்று வருகிறார். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் கஜினி. இப்படத்திற்கு இன்று வரை மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கஜினி 2 அப்டேட்..! சூர்யா சொன்ன நல்ல செய்தி..! 3

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, கஜினி படம் குறித்து அப்டேட் கொடுத்து உள்ளார். சினிமா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், கஜினி 2 படம் குறித்து தன்னை சந்தித்தாகவும், தான் விரைவில் இதை செய்யலாம் என கூறியதாகவும் தெரிவித்து உள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விளம்பரம்

Leave a Comment