தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆரம்பத்தில் சினிமாவில் சாதிக்க போராடிய இவருக்கு இயக்குனர் பாலாவின் படம் பெரும் கைகொடுத்து தூக்கியது. பாலா இயக்கிய நந்தா படத்தில் இருந்து நடிகர் சூர்யாவின் ரேஞ்ச் தமிழ் சினிமாவில் மாறியது. பின்னர் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்து , காக்க காக்க , ஆறு என பல வெற்றிபடங்களை கொடுத்து இன்று தனக்கான ரசிகர்கள் பட்டாளத்துடன் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துடன் உள்ளார். வீடியோ கீழே கொடுக்கபட்டுள்ளது.

இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து உள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி உள்ள இப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாகி உள்ளதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது.

அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கும் இப்படத்தினை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா தான் சினிமாவுக்கு எப்படி வந்தேன் என்பது குறித்து பேசியுள்ளார். அதில், தனது அம்மா , அப்பாவுக்கு தெரியாமல் வாங்கிய 25ஆயிரம் கடனை அடைப்பதற்காகவே சினிமாவிற்கு வந்ததாகவும், தற்போது உங்கள் முன்னாள் சூர்யாவாக நிற்பதாக கூறி உள்ளார்.