தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கி உள்ளார். ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு இனி படத்தில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்து உள்ளார்.2026 சட்டமன்ற தேர்தல் இலக்கு என கூறிய அவர் யாருடனும் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தின் அடுத்தகட்டமாக முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார் விஜய். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான ரசிகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உள்ளனர். மேடைக்கு வந்த நடிகர் விஜய் அனைவரையும் சந்தித்து வணக்கம் சொல்லி சென்று உள்ளார். தற்போது கட்சியின் கொள்கை பாடலை வெளியிட்டு உள்ளார் நடிகர் விஜய். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பெரியார் , காமராஜர், அம்பேத்கர் என அனைவரையும் கொள்கை தலைவர்களாக முன்னிறுத்தி உள்ளார்.

இதன்மூலம் சமத்துவ சமுதாயத்தினை விஜய் உருவாக்க உள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது.
Embed Video Credits : Tamilaga vettri kazhagam