ஐ.நாவில் பொதுவாக்கெடுப்பு: மம்தா சவால்!

இந்திய குடியுரிமை திருத்த சட்டமும், என்.ஆர்.சி சட்டமும் ஐ.நா கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் களமாக மாறி வருகிறது. முக்கிய தலைநகர்களில் ஊரடங்கு தடை உத்தரவும், மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று மங்களூர் மற்றும் லாக்னவ் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை மேற்கொண்ட துப்பாக்கி சூட்டினால் 5 பேர் மரணமுற்றத்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விளம்பரம்
ஐ.நாவில் பொதுவாக்கெடுப்பு: மம்தா சவால்! 1
கல்கத்தா பேரணி

இப்போராட்டம் மேற்கு வங்கத்திலும் தீவிரமடைந்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் மம்தா, பாஜகவிற்கு தைரியம் இருந்தால், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை ஐ. நாவின் கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்தடும். அங்கு அதிக வாக்குகளை பெறாவிட்டால், சட்டத்தை விளங்கிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பெரும்பான்மை இருப்பதனால் மட்டும் நீங்கள் எதையும் செய்ய முடியாது. சமூகத்தில் ஒவ்வொரு தூண்களையும் நீங்கள் பயமுறுத்துகிறீர்கள்” எனவும் கூறியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment