தமிழ் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்விகா. இவர் மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்தின் மூலம் பலருக்கும் அறியப்பட்டவர் ஆகினார் ரித்விகா. தொடர்ந்து வரிசையாக பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரித்விகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் வரவேற்பினை பெற்று வெற்றியாளர் ஆகினார் . இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவரது சினிமா வாழ்க்கையில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மாறுதல்கள் என்பது ஒன்றும் இல்லை. தற்போது சில ஆண்டுகளாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கி இருக்கிறது. இதனால் இவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் தீபாவளி போனஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது.

தற்போது ரித்விகா விடுமுறையை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார்.அங்கு எடுத்த புகைப்படங்களை நடிகை ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். மேலும் அங்கு சுறா மீனுடன் கடலில் குளித்தை வீடியோவாக எடுத்து வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.