பிரபல சீரியல் நடிகை போதைப்பொருள் வழக்கில் கைது..! அதிர்ச்சியில் சின்னத்திரை..!

சின்னத்திரையையே இன்று அதிர்ச்சி ஆக்கி இருக்கும் சம்பவம் என்றால் அது பிரபல நடிகை போதை பொருள் வழக்கில் கைது ஆகி இருப்பது தான். தமிழகத்தில் போதைப்பொருளை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிரபல சின்னத்திரை நடிகை மீனா போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரபல சீரியல் நடிகை போதைப்பொருள் வழக்கில் கைது..! அதிர்ச்சியில் சின்னத்திரை..! 1

விளம்பரம்

மேலும், வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து உள்ளார். இவர் 5கிராம் மெத்தப்பட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் சென்னையில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் சப்ளை செய்து வருவதாக கூறி உள்ளார்.மேலும் மெத்தப்பட்டமைன் எங்கிருந்து வாங்கி எங்கு விற்கப்படுகிறது என போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment