விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்து இருக்கிறது பிக் பாஸ். இந்த 7 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி அசத்தி இருந்தார். தற்போது 8வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இதில் முதல் ஆளாக ரவீந்தர் இரண்டாவதாக அர்னவ், மூன்றாவதாக தர்ஷா வெளியேறி உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், தனக்கு மொட்டை கடுதாசி யார் எழுதி இருப்பார்கள் என போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION