ஜெய் நடிகை அஞ்சலியை திருமணம் செய்ய போகிறாரா?

ஜெய் நடிகை அஞ்சலியை திருமணம் செய்ய போகிறாரா? 1

கடந்த சில நாட்களாக ஜெய் – அஞ்சலி ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர். மேலும் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிடுவது, மகளிர் மட்டும் படத்துக்காக நடந்த தோசை சுடும் போட்டியில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது என்று இவர்களது காதலை மற்றவர்கள் உறுதி செய்யும் வகையில் நடந்து கொண்டனர்.

அதுமட்டுமன்றி இவர்கள் இருவரும் கொடைக்கானல் படப்பிடிப்பில் இருந்து யாரிடமும் சொல்லாமலேயே வெளியேறி விட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்த புகாரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் பலவிதமான முறையில் பேசினர்.

விளம்பரம்

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் ஜெய், “அஞ்சலிக்கும் எனக்கும் நல்ல புரிதல் உள்ளது. எனக்கு அஞ்சலியையும் அஞ்சலிக்கு என்னையும் பிடித்து இருக்கிறது” என்றார். எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள கேப்மாரி படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள நிலையில், காதல் கிசுகிசுக்களுக்கு ஜெய் மீண்டும் விளக்கம் அளித்து கூறியதாவது:-

எங்கள் இருவரையும் இணைத்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. திருமணம் என்பது சந்தோஷமான விஷயம். எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றினால் அதை மறைக்க மாட்டேன். அஞ்சலியை நான் காதலிக்கவில்லை. அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை.” இவ்வாறு ஜெய் கூறினார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment