பிக் பாஸ் நிகழ்ச்சி 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டு கலக்கி வருகின்றனர். இதுவரை இந்த 18 பேரில் இருந்து ரவீந்தர் மற்றும் அர்னவ் வெளியேறி உள்ளனர். தற்போது நிகழ்ச்சி சூடுபிடிக்க தொடங்கி நடந்து வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 7சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு படப்பிடிப்புகள் இருப்பதால் அவர் தற்போது விலகி உள்ளார்.

இந்த சீசனில் தொகுப்பாளராக வரும் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் போல இலைமறை காயாக இல்லாமல், நேரடியாகவே முகத்திற்கு நேராக சொல்கிறார். இந்த சீசனில் போட்டியாளராக களம் இறங்கி இருப்பவர் தான் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருண் பிரசாத். இவருக்கும், கடந்த பிக் பாஸ் சீசன் வெற்றியாளர் அர்ச்சனாவுக்கு இடையே காதல் இருப்பதாக சின்னத்திரையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று அர்ச்சனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, பிக் பாஸ் வீட்டில் இருந்து அருண் இரவு 1 மணிக்கு, காதலிக்கு வாழ்த்துக்களை கூறி உள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.