ஜப்பானில் டான்ஸ் ப்ராக்டிஸ் செய்த நாட்டாமை பட ஜோடி..!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கொடிகட்டி பறந்த நடிகை மீனா. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் தற்போது வரை இருக்கிறது. தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று கூறினால் அது இன்றுவரை மீனா தான்.அப்படி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இன்று முன்னணி நடிகையாக உயர்ந்து உள்ளார். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள சினிமா வரை பல முன்னணி நடிகர்களுடனும் இவர் கதாநாயகியாக நடித்து விட்டார்.

ஜப்பானில் டான்ஸ் ப்ராக்டிஸ் செய்த நாட்டாமை பட ஜோடி..! 1

விளம்பரம்

தற்போது இவரது மகளையும் தன்னை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் எதிர்பாராத விதமாக கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார்.இது மீனாவின் வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பி போட்டது. அதிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார்.

ஜப்பானில் டான்ஸ் ப்ராக்டிஸ் செய்த நாட்டாமை பட ஜோடி..! 3

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் நெப்போலியன் மகன் திருமணத்திற்காக ஜப்பான் சென்றுள்ளார். அங்கு தோழி ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் உடன் சுற்றி பார்த்து வருகிறார்.இந்நிலையில் சரத்குமார் உடன் நடன பயிற்சி செய்து உள்ளார் மீனா. இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment