கார்த்தி போலீசாக மிரட்டும் வா வாத்தியாரே டீசர் இதோ..!

பருத்திவீரன் படத்தில் நடித்து சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் கார்த்தி. இந்த படத்தில் இவரது நடிப்பு, இதனை இவருக்கு முதல் படம் என்றே சொல்ல முடியாத அளவு இருக்கும். அந்த அளவிற்கு தனது நடிப்பினை காண்பித்து அசத்தியிருப்பார். இப்படத்திலேயே முன்னணி நடிகராக உயர்ந்த இவர் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார். பல வெற்றிப்படங்களை நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் கொடுத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கார்த்தி போலீசாக மிரட்டும் வா வாத்தியாரே டீசர் இதோ..! 1

விளம்பரம்

அண்மையில் இவர் நடிகர் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடித்த மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. ஜப்பான் , மெய்யழகன் என வரிசையாக கார்த்திக்கு தோல்வி படமாக அமைந்து வருவதால், அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்ததாக காதலும் கடந்துபோகும் இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே படத்தில் நடித்து உள்ளார்.

கார்த்தி போலீசாக மிரட்டும் வா வாத்தியாரே டீசர் இதோ..! 3

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். தற்போது இப்படத்தின் டீசர் படக்குழு வெளியிட்டுள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ரசிகர்கள் படம் வெற்றிபெற கார்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  சாதித்தானா கங்குவா..! முழு திரை விமர்சனம் இதோ..!

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

விளம்பரம்

Leave a Comment