லால்குடி அருகே உள்ள கொப்பாவளி ஊராட்சியின் அனைத்துப் பதவிகளுக்கும் பெண்களை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கொப்பாவளி ஊராட்சியில் மொத்தம் 6-வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு ஊராட்சி மன்றத் தலைவருக்கான போட்டியில், முழுக்க பெண்களை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வூர் ஆட்சிக்கு 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊர் மக்கள் ஒன்று கூடி அனைத்து இடங்களிலும் பெண்களையே நிறுத்தி போட்டியின்றி தேர்வு செய்துள்ளனர். இதனால் மற்ற ஊராட்சிகளுக்கு முன்மாதிரியாக கொப்பாவளி ஊராட்சி திகழ்கிறது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர் ராஜமோகன் போட்டியின்றி தேர்ந்தெடுவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.