திமுக தலைமையிலான நடைபெறும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை பெயராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன. பல போராட்டங்கள் கலவரமாக மாறி வரும் நிலையில், காவல்துறையும் தடியடி, துப்பாக்கிச் சூடு என தொடர்ந்து அடக்குமுறையை ஏவி வருகிறது.
இதுதொடர்பாக திமுக தலைமையில் மாபெரும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தப்பாக அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டணி கட்சி கூட்டத்தில் பேரணி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணையுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் பேரணியில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படும் வேண்டும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். எனவே இது தொடர்பாக திமுக வின் பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான குழு கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது.
அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்த கமலஹாசன் திமுக பேரணியில் கலந்துகொள்வதாக சூசகமாக பதிலளித்தார். ஆனால் பேரணி தேதி நெருங்கி வருகையில் கமலஹாசன் திடீரென தடம் மாறி உள்ளார். தற்போது திமுக தலைமையிலான பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையும் அக்கட்சி சார்பில் திமுகவிடம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் “கமல் அவர்களுக்கு செய்யப்பட்ட அறுவைசிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனை செய்ய அவர் வெளிநாடு சென்றுள்ளார். எனவே, தலைவர் இல்லாமல் இந்தக் கூட்டத்தில் கட்சி பங்கேற்க இயலாது. ஆனால், இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருந்த மசோதிவுக்கு தி.மு.க-வின் எதிர்ப்புப் போராட்டத்துக்கு தங்களது கட்சியின் தார்மிக ஆதரவு தொடர்ந்து இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.