நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளரா!?

நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளரா!? 1

சூர்யாவின் படங்கள் பல தோல்வி அடைந்தாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். இந்த நிலையில் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்பது குறித்த பட்டியலில் வெற்றிமாறன் உள்பட பலர் இருந்தனர். தற்போது சூர்யாவின் 40-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பில், சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாகவும், இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்க இருப்பதையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

விளம்பரம்

எஸ்.தாணு தயாரித்துள்ள வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் அடுத்து தற்போது தாணு-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர் என்பதும் இந்த கூட்டணியில் சூர்யா தற்போது இணைந்துள்ளார் என்பதும், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சூர்யாவிற்கு இந்த படமாவது வெற்றியை தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment