மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ‘திடீர்’ அறுவை சிகிச்சை!!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ‘திடீர்’ அறுவை சிகிச்சை!! 1

மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகரான மோகன் லால் தற்போது அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் தற்போது பிக் பிரதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். சித்திக் இயக்கி உள்ள இந்த படத்தில், அர்பாஸ் கான், அனூப் மேனன், ஹனி ரோஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் மோகன்லால்,அவரது முகநூல் பக்கத்தில் டாக்டர் ஒருவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் கையில் கட்டுப்போடப்பட்டுள்ளது.இது தொடர்பாக அவர் பதிவிட்ட செய்தியில், “என் கையை பத்திரமாக பார்த்து கொண்டதற்கு துபாய் பர்ஜீல் மருத்துவமனை் டாக்டர் புவனேஷ்வர் மச்சானிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்

இவர் கையில் காயத்துடன் சில நாட்களாகவே இருந்து வந்தார். சில நிகழ்ச்சிகளில் கையில் பேண்டேஜூடன் கலந்து கொண்டார். இதையடுத்து அவர் துபாய் சென்று ஆபரேஷன் செய்துள்ளார். அவர் விரைவாக குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

Leave a Comment