இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டுதோறும் வெளியிடப்படும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இந்தியா பல்கலைக்கழகங்கள் இடப்பெற்றுள்ளன.
இப்பட்டியலில் மும்பை, டெல்லி, சென்னை மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 200 இடங்களை பிடித்துள்ளன.
வேலைவாய்ப்பு திறன்களை உருவாக்கும் 758 கல்வி நிறுவனங்களை உள்ளடக்கி இந்த வருடாந்திர இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 15 சதவிகிதம் அதிகமான எண்ணிக்கையாகும்.
க்யூ.எஸ் இதழின் தரவரிசையில் 111 முதல் 120 வரையிலான பல்கலைக்கழக வரிசையில், மும்பை ஐ.ஐ.டி பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது. அதேபோல், 141-150 வரையிலான இடங்களில் டெல்லி ஐ.ஐ.டி பல்கலைக்கழகமும், 151-160 வரையிலான இடங்களில் சென்னை ஐ.ஐ.டி பல்கலைக்கழகமும் இந்தியா வரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

இவைகள் மட்டுமின்றி ஐ.ஐ.டி காரக்பூர், பிட்ஸ் பிலானி, மும்பை பல்கலைக்கழகம், ஐ.ஐ.எஸ்.சி பெங்களூர், ஐ.ஐ.டி கான்பூர் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகம் ஆகியவையும் 201 முதல் 500 வரையிலான தரவரிசையில் இடம் பெற்றுள்ளன.
பல்கலைக்கழகங்கள் எந்த அளவில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது என்பதனை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐந்து குறியீடுகளை க்யூ.எஸ் பயன்படுத்துகிறது.
வேலைவழங்குவோரின் தரம், முன்னாள் மாணவர்களின் நடப்பு தன்மை, முதலாளிகளோடு பல்கலைக்கழகங்கள் கொண்டுள்ள உறவு, முதலாளி அல்லது மாணவரின் பல்கலைக்கழக பங்களிப்பு, பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதங்கள் போன்றவை கணக்கில் கொள்ளப்படும்.
ஐ.ஐ.டி மும்பை பல்கலைக்கழகம் தேசிய அளவில் முன்னிலை வகிக்கிறது. மேலும் இப்பட்டியலில் 15 இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இவைகள் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் தரவரிசையில் முன்னேறியுள்ளன என்று க்யூ.எஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி இயக்குநர் பென் சோட்டர் தெரிவித்துளளார்.
இப்பட்டியலில் முதல் 10 இடங்களை இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு:
- மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்ஐடி), அமெரிக்கா
- ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா
- கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா
- சிட்னி பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா
- ஹார்வர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா
- சிங்குவா பல்கலைக்கழகம், சீனா
- மெல்போர்ன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா
- கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இங்லாந்து
- ஹாங்காங் பல்கலைக்கழகம், ஹாங்காங்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்லாந்து