திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அகதிகளாக மீள் வாழ்வு கேட்டு அடைக்கலம் புகுந்தவர்கள் தற்போது மத ரீதியாக பிரித்து கையாளப் படுகின்றனர். இதுகுறித்தான விவாதக்களம் பரபரப்பாக இருக்கிறது. மாணவர்கள் தரப்பில் போராட்டம் துவங்க, எதிர்க்கட்சிகள் தரப்பில் போராட்டம், பேரணி என சூடு பிடித்திருக்கிறது.
இது குறித்து நீண்ட நாள் அமைதி காத்து வந்த பிரதமர் மோடி கூறிய கருத்து தான் இப்போது மிக பெரிய குழப்பத்தை ஏற்படுத்திருக்கிறது. மோடியின் முகத்திரையை அனைத்து அரசு சார்ந்த விவகாரங்களையும் எழுதி இயற்றுபவர் உள்துறை அமைச்சரான அமித் ஷா தான். இது பல்வேறு காலக்கட்டங்களில் வெளிவந்துள்ளது. அமித் ஷாவின் கருத்தே மோடி என்ற பிம்பத்தின் மூலம் வருவது தான் வாடிக்கை.

ஆனால், தற்போது மோடியின் கருத்து முற்றிலும் அமித் ஷாவிடம் இருந்து விலகி செல்கிறது. இவர்கள் இருவரின் கருத்துக்கள் என்.ஆர்.சி சட்டம் குறித்தான அரசின் நிலைப்பாட்டில் குழப்ப நிலையை எட்டி இருக்கிறது.
தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் குறித்து தேவையில்லாத பயத்தையும், வெறுக்கத்தக்க கருத்துக்களையும் எதிர்க்கட்சிகள் பரப்பி வருகிறார்கள். தற்போது வரை இச்சட்டத்தை பற்றி எந்த ஒரு விவாதமும் நடைபெற வில்லை என மோடி கூறினார். இது தெளிவான அறிக்கை என்றாலும், உறுதி தன்மையை ஏற்படுத்தவில்லை.
மேலும், நாடு தழுவிய என்.ஆர்.சி சட்டம் பரவலாக்கப்படும் என மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சரான அமித் ஷா அழுத்தமான பதிவு செய்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்தோடு இணைந்து மக்களின் குடியுரிமையை பறிப்பது, ஏழைகளை துன்புறுத்துவது, ஆவணமற்ற பிரிவுகளை அழித்தொழிப்பது போன்ற நடவடிக்கைகள் யாருடைய கற்பனையிலிருந்து பிறந்திடாத ஒன்று! குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவை இணைந்து அகதி மற்றும் சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர் ஆகியோருக்கு இடையிலான வேறுபாட்டை மதத்தின் அடிப்படையில் பிரிப்பதாக இருப்பது தான் அனைவரின் வாதமும்.
கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலிலும் கூட மோடி அவர்கள் உரையாற்றும் போது, என்.ஆர்.சி சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தவறான கருத்தை பரப்புவதாக குற்றம் சாட்டினார். அதே குற்றசாட்டை தற்போதும் வைத்திருக்கிறார்.
அதேபோல, என்.ஆர்.சி சட்டத்தின் மீது தனது நிலைப்பாட்டு மீதான மறுபரிசீலனையை அரசாங்கம் மேற்கொள்ளும் போது அதனை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதேவேளையில் விமர்சனம் செய்பவர்களை இழிவுபடுத்துவதும் நோக்கை தவிர்க்க வேண்டும்.
தற்போது வரையில், அராசாங்கம் நம்மை தெளிவுபடுத்துகிறது என்ற பெயரில் முன்பை விட ஆழமாக குழப்பியிருக்கிறது. உண்மையாக இச்சட்டங்கள் மீதான மறுமதிப்பீடை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல. இந்தியா எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக இந்திய பொருளாதாரம் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வளர்ச்சி இருக்கிறது.
மோடி பிரதமராக பதவி ஏற்ற முதல் சுதந்திர தின விழாவில் பேசிய போது, “சாதிய மற்றும் மத கலவரங்களுக்கு 10 ஆண்டுகள் தடை போட்டுக்கொள்ளுங்கள்” என அறைகூவல் விடுத்தார். அதேபோல், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை அடிப்படையில் இல்லாமல், நாட்டின் ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்தை நடத்துவேன் எனவும் வாக்குறுதி அளித்தார்.
பல நகரங்கள் போராட்டத்தால் காயம் அடைந்துள்ள இந்த நேரத்தில், தன்னுடைய வாக்குறுதியை மீட்டெடுக்க வேண்டும். தனது தவறாக கொள்கை முடிவால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்த முயல வேண்டும். அதேபோல, எதிர் கருத்தாளர்கள் மீதும், எதிர் கட்சிகள் மீதும் இந்த பாஜக அரசு கொண்டுள்ள சகிப்பின்மை அபாயக்கரமாக இருக்கிறது.

உத்தரபிரதே மாநிலத்தில் வன்முறையாக மாறிய போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை பழிவாங்குவதாக சபதம் எடுத்துள்ளார் யோகி ஆதித்திய நாத். துப்பாக்கி சூட்டில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை இது நாள் வரையில் தெரிவிக்காமலே இருக்கிறார்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்களை அழிப்பேன் என ஒரு பாஜக எம்.எல்.ஏ சொல்கிறார்.
இந்த விஸ்வரூப விவகாரத்தில் எதிர்கட்சிகளை மோடி விமர்சித்த போதும், அவரது சகாக்கள் தொடர்ந்து அநாகரீகமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் தான் மோடிக்கும், பாஜகவிற்கும் வெவ்வேறு கருத்துக்கள் இருப்பது வெளிப்படுகிறது. அதனால் தான் மோடியின் கருத்து நம்மை மேலும் குழப்பும் வண்ணமே இருக்கிறது.