சர்ச்சையில் சிக்கிய ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்

குழந்தைகளுக்கு தேவையான சோப்பு, ஷாம்பு முதல் அனைத்து பொருட்களும் தயாரித்து விற்பனை செய்துவரும் பிரபல நிறுவனம் ஜான்சன் & ஜான்சன். பல நுகர்வோர் பொருட்களை பெரிய நிறுவனம் என்றாலும் சமீபகாலகமாக அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

இந்த நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்துவதால் பின்விளைவுகள் ஏற்படுவதாக இந்த நிறுவனத்தின் மீது பல வழக்குகள் உள்ளது. இதற்காக கோடிக்கணக்கான ரூபாயும் அபராதமாக செலுத்தியுள்ளது இந்த நிறுவனம்.

விளம்பரம்

இந்நிலையில் ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டதால் 230 கோடி ரூபாய் அபராதம் விதித்து NAA உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிவிகிதத்தில் மாற்றங்களின் பயனை நுகர்வோருக்கு அளிக்க தவறியதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்துக்கு 230 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த நவம்பர் 15 -178 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்து. இதில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் இந்த ஜி.எஸ்.டி விகிதக்குறைப்பின் பலனை நுகர்வோருக்குக் கொடுக்காமல் மோசடி செய்ததை NAA ஆணையம் கண்டுபிடித்துள்ளது.

விளம்பரம்
தொடர்புடையவை  மஞ்சு வாரியருடன் லடாக்கில் பைக் ரைடு சென்ற தல அஜித்.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

இதே போன்ற குற்றச்சாட்டுக்காக நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு 90 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment