தர்பார் படத்தை வெளியிடுவதில் சிக்கல்! விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையேயான பிரச்சினை!!

தர்பார் படத்தை வெளியிடுவதில் சிக்கல்! விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையேயான பிரச்சினை!! 1

தர்பார் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தற்போது தர்பார் படத்தின் விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சினை உருவாகி உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 75 சதவீதத்திற்கும் மேல் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் தர்பார் படத்தை இன்னும் வாங்கவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

தர்பார் படத்துடைய டிக்கெட்டுகள் அதிகமாக உள்ளது. உயர்ந்த விலைக்கு விற்க சொல்வதால் இழுபறி  ஏற்பட்டு உள்ளது. டிக்கெட் விலையில் அதிகளவில் விநியோகஸ்தர்கள் பங்கு கேட்பதால் இழுபறி ஏற்பட்டு உள்ளது.கபாலி படம் வெளியீட்டின் போது இதேபோல் பிரச்சினை உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

இந்நிலையில், மலேசியாவில் தர்பார் படம் வெளியிடு குறித்து டிஎம்ஒய் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் லைகா நிறுவனம் தற்போது 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி உத்தரவாதம் அல்லது வங்கியில் செலுத்தும் வரை தர்பார் படத்தை மலேசியாவில் வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 4 கோடியே 90 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்யும் பட்சத்தில் தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடலாம் எனவும் சென்னை ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment