சூர்யா நடித்துவரும் சூரரைப் போற்று படத்துடைய டீசர் வெளியீடு!!

சூர்யா நடித்துவரும் சூரரைப் போற்று படத்துடைய டீசர் வெளியீடு!! 1

சுதா கொங்கரா இயக்கி வரும் இந்த படத்திற்கு சூரரைப் போற்று என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் சேர்ந்து தயாரிக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

விளம்பரம்

மேலும், படத்தின் டீசர் சமீபத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சூர்யா தனது சொந்தக் குரலில் பாடியுள்ள ஊர்க்குருவி பருந்தாகுது பாடலும் இடம்பெற்றுள்ளது. மேலும் கதைப்படி சூர்யா பேசும் எதார்த்தமான வசனங்களும் அதிகம் இடம்பெற்றுள்ளன. சுதா கொங்கரா இறுதி சுற்று படத்தின் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சூர்யாவை வைத்து படம் இயக்கியிருப்பதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment