முதன் முறையாக தனது இசை வாழ்க்கையில் வீட்டில் இசை அமைத்த இசைஞானி!!

முதன் முறையாக தனது இசை வாழ்க்கையில் வீட்டில் இசை அமைத்த இசைஞானி!! 1

தமிழ் திரையுலகில் இசை அமைப்பதில் சிறந்த இடத்தை பெற்று வலம் வருபவர் இசைஞானி இளையராஜா. இவர் 30 ஆண்டுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் இசை அமைத்து வந்தார்.

பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களையும், காலத்தால் அழிக்க முடியாத பாடல்களையும் பாடி ரசிகர்களை தன்வச படுத்தியவர். இந்நிலையில் அந்த ஸ்டுடியோவிலிருந்து வெளியேறும்படி நிர்வாகம் கேட்டுள்ளது. இதனால் பிரச்னை எழுந்துள்ளது.

விளம்பரம்

இந்த நிலையில் இளையராஜா புதிய படத்திற்கு முதன்முறையாக தனது வீட்டில் பின்னணி இசை அமைத்துள்ளார். விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். ரம்யா நம்பீஸன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்துக்கான பின்னணி இசையை இளையராஜா தனது வீட்டில் நடத்தியிருக்கிறார். இதற்காக இசை கலைஞர்களை நேரடியாக தனது வீட்டுக்கு வரவழைத்து இந்த நிகழ்வை நடத்தி காட்டியிருக்கிறார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment