பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினி!!

பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினி!! 1

ரஜினி தனது 168-வது படத்தில் நடித்துவரும் நிலையில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. சிவா இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு, மீனா நடிக்கின்றனர். சதீஷ், சூரி, கீர்த்தி சுரேஷ் போன்ற பலர் நடித்து வருகின்றனர். நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் இன்று சென்னை திரும்பினார்.

விமானநிலையத்தில் இருந்து வெளியேறிய ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்திற்கு வந்து “அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துவிட்டு உடனடியாக காரில் ஏறி வீட்டுக்கு சென்றார்.

விளம்பரம்

இந்த நிலையில், ரஜினி நடித்து இருக்கும் தர்பார் படம் , நாளை வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment