
கடந்த 2001ம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி இரட்டை வேடத்தில் நடித்த படம் தான் ஆளவந்தான். இந்த படம் அன்றைய தினம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
பல்வேறு விமர்சனங்கள் எதிர்மறையாக எழுதப்பட்டது. இதனால் படகுழு ஏமாற்றம் அடைந்ததுடன் தயாரிப்பாளரும் நஷ்டம் ஏற்பட்ட தாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இப்படத்தை பல்வேறு டிவி செனல்களில் பலமுறை திரையிட்ட துடன் சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் நடந்த பென்டாஸ்டிக் விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது.
விளம்பரம்
அப்போது ஆளவந்தான் படத்தில் சில மாறுதல்களை மேற்கொண்டு பட நீளத்தையும் குறைத்திருந்தது. மேலும், இந்த ஆண்டு ஏப்ரல் வாக்கில் ரீ ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது
விளம்பரம்