குண்டர்கள் தாக்குதல்: ஐவர் தலைமையில் விசாரணை ஆணையம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான குண்டர்கள் தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஐவர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம், கல்வி கட்டண உயர்வு போன்ற காரணங்களால் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஜனவரி 5ஆம் தேதி அன்று முகமூடி அணிந்த குண்டர்களால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கப்பட்டனர்.

விளம்பரம்
குண்டர்கள் தாக்குதல்: ஐவர் தலைமையில் விசாரணை ஆணையம் 1
விசாரணை குழு அறிவிப்பு

மேலும், 250 சர்வதேச பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர் அமைப்புகள் துணை வேந்தர் ஜெகதீஷ்குமார் பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்தன.

இத்தகைய குண்டர்களின் தாக்குதலுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், ஐவர் தலைமையில் குண்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஜெகதீஷ்குமார் கமிட்டி அமைத்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment