மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோனே! படத்தை வெளியிட எதிர்ப்பு!!

மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் பங்கேற்ற தீபிகா படுகோனே! படத்தை வெளியிட எதிர்ப்பு!! 1

தாக்குதல் சம்பவத்துக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டத்தில் தீபிகா படுகோனே பல்கலைக்கழகத்துக்கே நேரில் சென்ற கலந்து கொண்டார். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி தீபிகா படுகோனே பேராட்டத்தில் கலந்துக் கொண்டதால் அவரது துணிச்சலை பலரும் பாராட்டினர். தீபிகா படுகோனேவுக்கு எதிராகவும் சிலர் குரல் கொடுத்தனர். அவர் நடித்துள்ள சப்பாக் படத்தின் விளம்பரத்துக்காக இந்த மாதிரி விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார் என்று விமர்சித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த படத்தை அனைவரும் புறக்கணிக்க செய்யும் படி வலைத்தளங்களில் பல்வேறு கருத்து பரவி வருகிறது. அத்துடன் சப்பாக் படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்து அதை ரத்து செய்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

விளம்பரம்

இதுபற்றிய தனது கருத்தை தெரிவித்த தீபிகா படுகோனே, “எனது நடவடிக்கையை விமர்சித்து கருத்து சொல்வார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். நான் நடித்த பத்மாவத் படம் வந்தபோதும் இப்படித்தான் எதிர்த்தார்கள். இதற்காக நான் என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டேன். மனதுக்கு சரி என்று தோன்றுவதை சொல்லி விடுவேன். இந்தியாவின் நிலையை நினைத்தால் பயமாக இருக்கிறது.” என்றார்.தீபிகாவின் சப்பாக் படம் இன்று (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.

விளம்பரம்

Leave a Comment