குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்ததற்கு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார்.
இந்தியா முழுவதும் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி இருக்கும் திருத்தப்பட்ட குடியுரிமை மசோதா குறித்தான காங்கிரசின் நிலைப்பாட்டினை கேள்விக்குறியாக்கி கேள்வி எழுப்பினார் தேர்தல் கள வித்தகராக பிரசாந்த் கிஷோர்.

நாடாளுமன்றத்தில் கேள்வி போராடிய காங்கிரஸ், ஏன் களத்திற்கு வரவில்லை என கேள்வி கேட்டார். டெல்லியில் மாபெரும் பேரணியை காங்கிரஸ் செய்து காட்டியது.
அதன் பின்னர், களத்தில் போராடும் காங்கிரஸ், அது ஆளும் மாநிலங்களில் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஏன் இன்னும் உத்தரவாதம் அளிக்கவில்லை என்று மீண்டுமொரு கேள்வியை எழுப்பினார். மேலும், என்ஆர்சி குறித்து சோனியா ஏன் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை? என கேட்டார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று, சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், “தேசிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நிராகரித்துள்ள காங்கிரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பெரும் முயற்சிக்கு நன்றியை தெரிவித்துள்ளேன். என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ சட்டங்கள் பீகாருக்கு பொருந்தாது என தெரிவித்துள்ளார்.