பி.சி.சி.ஐ விருது: பும்ரா, பூனம் தேர்வு

இந்தியா கிரிக்கெட் வாரியத்தின் பாலி உம்ரிகர் விருதை ஜஸ்பிரீத் பும்ரா பெற உள்ளதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியதால் பல்வேறு விருதுகள் வழங்கி வருகிறது. இதற்காக பல வீரர்களை தேர்வு செய்து அவர்களை சிறப்பித்து வருகிறது பி.சி.சி.ஐ.

விளம்பரம்

இந்நிலையில் 2018-19ஆம் ஆண்டிற்கான விருதுக்கான பட்டியலை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. இதில் பெண்கள் இந்திய அணியின் பூனம் யாதவ் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பி.சி.சி.ஐ விருது: பும்ரா, பூனம் தேர்வு 1
இந்திய வீரர்கள் பூனம் மற்றும் பும்ரா

அதேபோல், வாழ்நாள் சாதனையாளர் விருதினை ஸ்ரீகாந்த் மற்றும் அஞ்சும் சோப்ரா ஆகியோருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இந்த சீசனில், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடி ஆறு டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்டுகளை பும்ரா எடுத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் அவர் 17 போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், டி20 போட்டியில் 7 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் பும்ரா.

இதேபோல், பூனம் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளையும், 15 டி20 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment