வங்கி மோசடி: பெங்களூர் வங்கி மீது நடவடிக்கை

புதிதாக எழுந்துள்ள வங்கி மோசடி காரணமாக பெங்களூரில் இயங்கி வரும் வங்கிக்கு புதிய தடையை விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.

இந்தியாவில் தொடர்ந்து வங்கி மோசடி எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் மோசடிகள் குறைந்தபாடாகவே இல்லை.

விளம்பரம்
வங்கி மோசடி: பெங்களூர் வங்கி மீது நடவடிக்கை 1
ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா வங்கி

அதனை உறுதி செய்யும் விதமாகவே அடுத்தடுத்த மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. முன்னதாக பஞ்சாபி தேசிய வங்கியில் நடந்த மோசடிகள் இன்றும் நினைவிருக்கும் நிலையில், தற்போது அடுத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

பெங்களூரில் இயங்கி வரும் ஸ்ரீ குரு ராகவேந்திரா சஹாரா என்ற தனியார் நிதி நிறுவனம் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் அடிப்படையில், அடுத்த ஆறு மாதங்களுக்கு புதியதாக எந்தவொரு டெபாசிட்டுகளையும் பெறக் கூடாது. அதே போல் வாடிக்கையாளர் பெரிய அளவிலான தொகையினை எடுக்கவோ அனுமதிக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

விளம்பரம்

சஹாரா வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வைத்துள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆறு மாதத்திற்கு 35,000 ரூபாய்க்கு கொடுக்க கூடாது என தடை வித்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment