அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த மாதம் (பிப்.24) 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2019 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்த போது ஹீஸ்டன் நகரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது அமெரிக்க அதிபர் இந்தியாவிற்கு வருகை தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதிபர் டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்வதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள் குழு சமீபத்தில் இந்தியா வந்து ஆலோசனை நடத்தியது.
அதில், டிரம்ப் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்பின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து முடிவு செய்வதற்காக அமெரிக்க உயர் அதிகாரிகள் குழு சமீபத்தில் இந்தியா வந்து ஆலோசனை நடத்தியது. அதில், டிரம்ப் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 24, 25 ஆம் தேதிகளில் டிரம்ப் இந்தியா வர வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையை இரு நாடுகளும் விரைவில் வெளியிட உள்ளன.