திமுக எம்.எல்.ஏக்கு குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழினை வழங்காத திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தின் இளநிலை உதவியாளரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

கடந்த குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பனுக்கு குடியரசு தின விழாவுக்கான அழைப்பிழ் வழங்கப்படவில்லை. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அழைப்பிதழை வழங்காத இளநிலை உதவியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியாளர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு தனக்கு அழைப்பிதழ் வழங்கவில்லை என திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் பெரியகருப்பன் புகாா் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில், விசாரனை மேற்கொண்டதில் திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய வே. பாரதிதாசன் என்பவா் அழைப்பிதழ் அனுப்பாமல் இருந்துள்ளாா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.