U19: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் உலக போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிற்கு முன்னேறியுள்ளது.

U19: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா 1
இந்திய அணி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் அரை இறுதி ஆட்டம் பாட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்றது.

விளம்பரம்

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்ஸேனா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருவரும் நிதானத்தைக் கையாண்டு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

விளம்பரம்

இந்த இணை முதல் விக்கெட்டுக்கு முதலில் 50 ரன்களைக் கடக்க, பிறகு அதை நீட்டித்து 100 ரன்களை எட்டியது. முதலில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் இதன்பிறகு ஓரளவு அதிரடி காட்டத் தொடங்கினார். இதையடுத்து, சக்ஸேனாவும் தனது அரைசதத்தை எட்டினார். எனவே, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எளிதானது.

35.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்த இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விளம்பரம்
தொடர்புடையவை  கிறிஸ் கெயில் சாதனை சதம் வெறித்தனமாக அடித்த சிக்ஸர் ‘வேஸ்ட்’ ஒரே போட்டியில் 37 சிக்சர்கள்...!

இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிக்கு மூன்றாம் முறையாக இந்திய அணி முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

Leave a Comment