விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது வேதாச்சலம் தனது வீட்டிற்கு மருமகளாக வந்த மஹாவை அவரது பிறந்த வீட்டிற்கு வேலை செய்வதற்கு அனுப்பி வைக்கிறார். மேலும் வீட்டிற்கு மருமகளாக ஒருவர் வந்துவிட்டால் அவர் பிறந்த வீட்டிற்கு செல்லவே கூடாதா? எனவும் அவர் ராஜலட்சுமியிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். இதனால் நெகிழ்ந்து போன மஹா, கண் கலங்கி கைகூப்பி அழுது கொண்டிருக்கிறார். வேதாச்சலம் குடும்பத்தின் மருமகளாக இருக்கும் மகா தனது தந்தையின் பொம்மை தொழிலுக்கு உதவுவதற்காக அவர்கள் வீட்டிற்கு செல்ல நினைக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்படுகிறது. மாமியார் ராஜலட்சுமிக்கும் மகாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் மஹா, ராஜலட்சுமியை கோபமாக பேசி விடுகிறார். இதனால் கோபமடைந்த சூர்யா மஹாவை வீட்டிலிருந்து வெளியே அனுப்ப திட்டமிடுகிறார். ஆனால் சூர்யாவின் தந்தை மீண்டும் அவரை வீட்டிற்கு அழைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மஹா தன் தந்தையின் தொழிலுக்கு செல்வதற்கு அனுமதி கேட்கிறார். ஆனால் அவர் அங்கு செல்லக்கூடாது என்று ராஜலட்சுமி அவருக்கு கட்டளை போடுகிறார். ஆனால் குறிக்கிடும் வேதாச்சலம், “ஒரு பெண் தான் விரும்பிய செயலை செய்வதற்கான சுதந்திரமும் அதிகாரமும் திருமணத்திற்கு பிறகு நின்று விடுமா? என்று கேட்கிறார்.

மேலும் மஹாவை அவரது வீட்டிற்கு செல்லுமாறும் அனுப்பி வைக்கிறார். இதனால் நெகிழ்ந்து போன மஹா கையெடுத்து கும்பிட்டு வேதாச்சலத்திற்கு நன்றி தெரிவிக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television