ஆஹா கல்யாணம் தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது ஆஹா கல்யாணம் சீரியல். இந்த சீரியலில் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளை சூர்யாவை தங்கை மஹா கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொள்கிறார். சூர்யாவின் தம்பியாக இருக்கும் கௌதம் அண்ணனுக்கு திருமணம் நடக்கக்கூடாது என்கிற கெட்ட எண்ணத்தில் அவருக்கு பார்த்திருந்த பெண்ணை கடத்திக் கொண்டு சென்று விடுகிறார். இதனால் வேறு வழியில்லாமல் அந்த பெண்ணின் தங்கையை திருமணம் செய்து கொள்கிறார் சூர்யா. கதை இப்படியாக ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தொடர் பலருக்கும் ஃபேவரைட் சீரியலாக மாறி இருக்கிறது. ஏழை குடும்பத்தில் இருந்து வந்த பெண் என்பதால் சூர்யாவின் தாயார் அவரை வெறுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வசதியான மாப்பிள்ளையாக இருக்கும் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட மகா அந்த வீட்டில் என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்பது குறித்த கதையாக தான் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இதில் சூர்யாவின் தம்பியாக இருக்கும் கௌதம் மாட்டுவானா இல்லையா என்பதுதான் கதையின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணம். இந்த நிலையில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. சூர்யாவை பார்ப்பதற்காக மகா ஆபீஸிற்கு செல்கிறார். ஆனால் காவலர்கள் மகாவை உள்ளே போக விடாமல் தடுக்கின்றனர். அதற்கு மகா தான் தான் சூர்யாவின் மனைவி என்று சொன்னதும் காவலர்கள் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். பின்னர் அங்கு வரும் சூர்யா யாராக இருந்தாலும் மரியாதை கொடுங்கள் என்று சொல்லிவிட்டு மகாவை காரில் அழைத்துச் செல்கிறார்.
பின்னர் பூக்காரி ஒருவர் வந்து மகாவிற்கு பூ வாங்கி கொடுக்குமாறு சூர்யாவிடம் சொல்கிறார். ஆனால் சூர்யா இது எனது மனைவி இல்லை என்று சொல்லி கையைப் பிடித்து இழுத்து செல்கிறார். இதை கவனித்த போலீஸ் ஒருவர் எதற்காக இந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்கிறாய் என்று கேட்க, இவர் தான் என் மனைவி என சூர்யா கூறுகிறார். அதற்கு அந்தப் பெண் சொல்லட்டும் என்று போலீஸ் சொல்ல மகா அழுவது போல் நடிக்கிறார். இதனை பார்த்த பூக்காரி இந்தப் பெண் அவருடைய மனைவி இல்லை என்று கூறுகிறார். உடனே சூர்யா மகாவிடம் நீதான் என் மனைவி என்று போலீஸிடம் சொல்லி எனக் கூறுகிறார். அதற்கு மகா சாரி கேளுங்க நான் சொல்கிறேன் என சொல்ல, சூர்யாவும் வேலு வழியில்லாமல் மகாவிடம் சாரி கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television