இன்றுவரை உலக அழகி என்றால் அனைவரும் கைகாட்டும் ஒரே நடிகை ஐஸ்வர்யா ராய் தான். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளார் இவர். மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகிய இருவர் என்ற படத்தில் நடித்து சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்து இருந்தார். இப்படத்தை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்து உள்ளார்.

இவருக்கு தமிழில் வெளியான ஜீன்ஸ் படம் மாபெரும் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து பழமொழிகளில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயை நடிகர் அபிஷேக்பச்சன் விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.

தற்போது இதற்கு நடிகர் அபிஷேக் பச்சன் மறுப்பு தெரிவித்து உள்ளார். விவாகரத்து என்பது பொய்யான செய்தி நாங்கள் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்து வருகிறோம் என கூறி உள்ளார். தற்போது இவரின் ரசிகர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.