Categories: சினிமா

மீண்டும் பைக் ரைடு கிளம்பிய நடிகர் அஜித்..! வைரலாகும் செம்ம மாஸான புகைப்படங்கள்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் உயரம் தொட்ட நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தனது அசாத்தியமான நடிப்பால் பல லட்ச ரசிகர்களை தனது வசம் ஆக்கி இருக்கிறார் இவர். வலிமை படத்திற்கு பிறகு இவரது படங்கள் எதுவும் வெளியாகாததால் , ரசிகர்கள் அடுத்தப்படத்திற்காக ஆவலுடன் காத்து இருக்கின்றனர். லைக்கா தயாரிப்பில் மகிழ் இயக்கத்தில் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து உள்ளார்.

மீண்டும் பைக் ரைடு கிளம்பிய நடிகர் அஜித்..! வைரலாகும் செம்ம மாஸான புகைப்படங்கள்..! 1

இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரெஜினா கேசன்ட்ரா, அர்ஜுன் , ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். தற்போது தொடர்ந்து படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வருகிறது. இதுவரை படத்தின் அறிவிப்பு தேதி வெளியாகாத நிலையில் ரசிகர்கள் கடும் சோகத்தில் உள்ளனர். தற்போது இப்படம் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்து உள்ளனர்.

இவர் அடுத்ததாக இயக்குனர் ஆத்விக் ரவி இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பைக் ரைடு கிளம்பி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அஜித்தின் இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வெளியிட்டது

புதிய செய்திகள்