பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகர் நகுல். இப்படத்திற்கு பிறகு இவர் கதாநாயகனாக நடித்த காதலில் விழுந்தேன் படம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் உருவெடுத்தார் நகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மாசிலாமணி படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த நகுலுக்கு சில படங்கள் சினிமாவில் தோல்வியை கொடுத்தது.

2015ஆம் ஆண்டு வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்திற்கு பிறகு தொடர்ந்து, நாரதன், பிரம்மா என தோல்வி படங்களை கொடுத்ததால் சினிமாவில் நல்ல கதைக்காக நகுல் காத்திருந்தார். அப்படி அமைந்தது தான் வாஸ்கோடா காமா திரைப்படம். இப்படமும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தனது அடுத்தப்பட வேளைகளில் இறங்கி உள்ளார்.

ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த நகுலுக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாதது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இவர் தனது குடும்பத்துடன் துபாயில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
