Categories: சினிமா

நீ எப்படி சொல்லலாம்..! விஜயை விமர்சித்த போஸ் வெங்கட்..! தட்டி கேட்ட பிரபல நடிகர்..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவர் தற்போது தனது கேரியரின் உச்சத்தை தூக்கி எரிந்து விட்டு மக்களுக்காக அரசியல் வந்து உள்ளார். அண்மையில் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார். இவரின் மாநாடு தற்போது தமிழகம் முழுவதும் பேசுபொருளாகிய அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருமாறி இருக்கிறது.

நீ எப்படி சொல்லலாம்..! விஜயை விமர்சித்த போஸ் வெங்கட்..! தட்டி கேட்ட பிரபல நடிகர்..! 1

நடிகர் விஜயின் அரசியல் வருகையை பலரும் விமர்சித்து வந்தனர்.திமுக பேச்சாளரும் நடிகருமான போஸ் வெங்கட், யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம் என தாக்கி பதிவிட்டு உள்ளார். இதனால் ஏற்கனவே விஜய் ரசிகர்கள் இவரை ரவுண்டு கட்ட தொடங்கி உள்ளனர்.

தற்போது இவரின் இந்த ட்வீட்டர் பதிவை மேற்கோள்காட்டிய நடிகர் ரமேஷ் திலக், நீங்கள் சொன்னது தவறு, இதுபோல் சொல்ல கூடாது என பதிலடி கொடுத்து உள்ளார். ரமேஷ் திலகின் இந்த பதிவுக்கு TVK நிர்வாகிகள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

 

வெளியிட்டது

புதிய செய்திகள்