தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நாயகியாக நடித்து சின்னத்திரையில் வரவேற்பினை பெற்றவர் நக்ஷத்ரா நாகேஷ். இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. இந்த தொடரின் மூலம் பல குடும்பத்தலைவிகளையும் பெண்களையும் ரசிகர்களாக கொண்டு இருக்கிறார் நக்ஷத்ரா. சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய இவர், வெள்ளித்திரையில் சில படங்கள் நடித்து உள்ளார்.

இந்த தொடரின் மூலம் மிக பிரபலமாக உருவெடுத்து உள்ளார். இந்நிலையில் எதிர்ப்பாராத நிலையில் சீரியல் முடிவுக்கு வந்து இருப்பது இவரின் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர் அடுத்து விரைவில் தொடரில் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் விடுமுறையை கொண்டாட ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.